இசைத் தமிழ் வரலாறு

E-Book Overview

இந்த நூலில், திருக்குறள் முதலான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் காலம் முதல் சேக்கிழர் காலம் வரையிலான இசைச் செய்திகள் பல முறையாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் இசைக்கப்பட்ட இசைக் கருவிகள் மற்றும் இசைக் கலைஞர்கள் பற்றிய பல செய்திகள் தமிழிசை வரலாற்றிற்குப் பெருந்துணை புரிவனவாம். யாழிசை பற்றிய பல வகையான தகவல்களைப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் காண்கிறோம். யாழ்நலம் கூறும் காப்பியமான பெருங்கதையின் ஆசிரியர் கொங்கு வேளிரின் இசைப்புலமைத் திறங்களை ஆசிரியர் தொகுத்தளித்திருப்பது மிகவும் போற்றத்தக்கதாகும். இவ்வாறே, சீவக சிந்தாமணியைப் படைத்த திருத்தக்கத் தேவரின் இசைப்புலமையையும் இவர் போற்றியுரைக்கின்றார். பாண்டிய, பல்லவ மற்றும் சோழ மன்னர்கள் வரலாறுகளில் காணும் இசைத்தமிழ்க் கூறுகள் பல இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. தேவாரத் திருப்பதிகங்கள் பண் ஆராய்ச்சிக்குப் பெருங்களமாக விளங்குகின்றன என்பதையும் இந்நூலில் நன்கு விளக்கக் காண்கிறோம். மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்கள், ஆழ்வார் பன்னிருவரின் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் நூற்றுக்கணக்கான இனிய பண்களில் தாளத்துடன் பாடப்பெற்றவை என்பதற்குப் பல சான்றுகளை இந்நூலில் காணலாம். திருமாளிகைத் தேவர் முதலான ஒன்பதின்மர் பாடிய திருவிசைப்பாவிலுள்ள அனைத்துப் பாடல்களும் இன்னிசைப் பாடல்களே என்பதைப் பண்ணமைதி கொண்டு நிறுவுகிறார் இந்நூலாசிரியர். சிலப்பதிகாரத்தின் உரையெழுதிய அடியார்க்கு நல்லாரைப் பின்பற்றியே சேக்கிழார் தம் பெரியபுராணத்தில் இசைக்குறிப்புகளை அளித்திருக்கக் கூடும் என்ற கருத்தை ஆசிரியர் நிறுவுகிறார். தமிழிசைக் கலைச் சொற்களை அகரநிரலாகத் தொகுத்து இந்த நூல் வழங்குகிறது.

E-Book Information

  • Volume Info: பகுதி-2

  • Year: 2,006

  • Pages: 258

  • Pages In File: 258

  • Language: Tamil

  • Topic: 61

  • Org File Size: 6,501,775

  • Extension: pdf

  • Toc: பொருளடக்கம் 1. நீதிநூல்கள் தரும் இசைச் செய்திகள் 2. யாழ்நலம் கூறும் காப்பியம் 3. சிந்தாமணி வழங்கும் இசைக் குறிப்புகள் 4. சங்கத் தமிழ்ப் புரவலர்கள் 5. அருங்கலைகள் போற்றிய பல்லவர்கள் 6. பண் சுமந்த பாடல்கள் 7. ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் 8. உள்ளமுருக்கும் இசைப் பாடல்கள் 9. முத்தமிழ் வளர்த்த சோழ மன்னர்கள் 10. அமுத இசையில் அமைந்த திருவிசைப்பா 11. சேக்கிழார் பெருமான் அளிக்கும் இசைச் செய்திகள் 12. கலைச் சொற்கள்

You might also like

Drawing Nature
Authors: Stanley Maltzman    92    0


How Computers Work
Authors: Ron White    133    0


цифровая фотография для начинающих
Authors: Барон С.Л. , Пек Д.    203    0


свет и освещение
Authors: Д. Килпатрик    190    0


архитектура: формы, конструкции, детали
Authors: Уайт Э. , Робертсон Б.    244    0


черно-белая фотография
Authors: Фрост Л.    233    0


макетирование из бумаги икартона
Authors: Калмыкова Н.В. , Максимова И.А.    217    0



Digital Nature Photography: The Art And The Science
Authors: John Gerlach , Barbara Gerlach    107    0


The Photoshop Book For Digital Photographers
Authors: Scott Kelby    102    0